/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளஸ் 2 தேர்வில் 93.66 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் கரூர் 30வது இடம்
/
பிளஸ் 2 தேர்வில் 93.66 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் கரூர் 30வது இடம்
பிளஸ் 2 தேர்வில் 93.66 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் கரூர் 30வது இடம்
பிளஸ் 2 தேர்வில் 93.66 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் கரூர் 30வது இடம்
ADDED : மே 09, 2025 02:03 AM
கரூர், மே 9
பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில், 93.66 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில், 30வது இடத்தை கரூர் பிடித்துள்ளது.
தமிழகத்தில், 2024-25 கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மூலம், இணையத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. கரூர் மாவட்டத்தில், 103 பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 53 பேர்தேர்வில்கலந்து கொண்டனர். அதில், 4,238 மாணவர்கள், 5,178 மாணவியர் என மொத்தம், 9,416 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93.66 சதவீதமாகும்.
அரசு பள்ளிகளில், 2,287 மாணவர்கள், 2,898 மாணவியர் என மொத்தம், 4,641 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 89.51 சதவீதம். மாநில அளவில், 30வது இடத்தை கரூர் மாவட்டம் பெற்றுள்ளது.
* குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 77 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 99 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, 95 சதவீதம், இனுங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
* கரூர் மாவட்ட அளவில், முதல் இரண்டு இடங்களை, அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி மாணவிகள் பெற்றனர். பள்ளப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரான வி.என். வஹ்பியா பாத்திமா, 586 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், யு.எ.தஸ்பீஹா தஸ்னீம், 585 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர். மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவியருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.