ADDED : ஜூன் 25, 2024 02:14 AM
கரூர் அரசு கலைக்கல்லுாரியில்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் இளம் கலை, இளம் அறிவியல் முதலமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-25) கலந்தாய்வு கூட்டம் கடந்த 30 ல் தொடங்கி, கடந்த, 14 வரை நடந்தது. அதில், பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்.,-- பி.காம்., சி.ஏ.,- பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம், பி.எஸ்.சி., ஆகிய பாடப்
பிரிவுகளுக்கும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நேற்று இளம் கலை படிப்புக்களுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நாளை, வரும் 28 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
வெள்ளை கோடுகள்இல்லாத வேகத்தடை
தான்தோன்றிமலைஊ: கரூர் அருகே கோயம்பள்ளி கிராமத்துக்கு செல்லும் சாலைகளில், அதிகளவில் வளைவுகள் உள்ளது. பல இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைக்க, வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருளில் ஒளிரும் வகையில், வெள்ளை கோடு போடவில்லை. மேலும், அப்பகுதியில் தெரு விளக்குகள் அதிகளவில் இல்லாததால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில், செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளில் வெள்ளை கோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணராயபுரம் பகுதியில்எள் அறுவடை பணி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், எள் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பகாப்பட்டி, சிவாயம், கருப்பத்துார், வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், வயலுார், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய பகுதி விவசாயிகள் கிணற்று நீர் பாசன முறையில் எள் சாகுபடி செய்துருந்தனர். மழை நீரால் எள் செடிகள் நன்கு வளர்ந்துள்ளது. மேலும் தொழிலாளர்களை கொணடு, எள் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இதுதவிர வெயிலில் எள் உலர்த்தப்பட்டு வருகிறது.
வியாபாரி மாயம்: மனைவி புகார்குளித்தலை: குளித்தலை அடுத்த, மாயனுார் பஞ்., சந்தைபேட்டையை சேர்ந்தவர் வேலுசாமி, 42, மீன் வியாபாரி. இவர், தொழில் சம்மந்தமாக சிலரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். குறிப்பிட்ட நாட்களில் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த தகவல் அவருடைய மனைவி சாந்திக்கு தெரியவந்தது. இதனால் கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மே, 26 காலை, 9:00 மணியளவில் தம்பதியரிடையே தகராறு நடந்தபோது, அவருடைய மகன் தடுத்து தந்தையிடம் தகராறு செய்தார். மனம் வெறுத்து காணப்பட்ட வேலுசாமி, கடைக்கு சென்றவர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.
தனது கணவரை காணவில்லை என, மனைவி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுசாமியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சிவப்பு சோளம் விளைச்சல்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சரவணபுரம், வரகூர், குழந்தைப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் சிவப்பு சோளம் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதற்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. மேலும் சமீபத்தில் பெய்த மழையால், சிவப்பு சோளம் பயிர்கள் நல்ல முறையில் வளர்ச்சி கண்டுள்ளது. சில வாரங்களில் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். சோளம் பயிர்கள் கால்நடை
களுக்கு தீவனமாக பயன்படுகிறது. இதனால் கிராமங்களில், இப்பயிர்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
தானியங்கி சிக்னல் தேவைதான்தோன்றிமலை,-
கரூர் அருகே வெள்ளியணை வளர்ந்து வரும் நகராக உள்ளது. ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. இதை தவிர்க்க, வெள்ளியணை பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.