ADDED : ஜூன் 27, 2024 03:41 AM
தண்ணீர் இல்லாத
சின்டெக்ஸ் தொட்டி
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது மக்கள் வசதிக்காக, சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு, மாநகராட்சி தரப்பில் தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக, சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது இல்லை. வெறும் காட்சி பொருளாக, சின்டெக்ஸ் தொட்டி உள்ளது.
இதனால், குறைதீர் முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள், தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சின்டெக்ஸ் தொட்டியில்
நாள்தோறும் தண்ணீர் நிரப்ப, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்ம விருது பெற
விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்: பத்ம விருதுகள் பெறுவதற்கு வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணிகள், அறிவியல் மற்றும் பொறியியல், பொதுசேவை, சிவில் சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. பதிவு செய்த விண்ணப்பங்களை தேர்வுக்குழு மூலம், பரிசீலனை செய்து இவ்விருது வழங்குவதற்குரிய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
விருதுக்கான விண்ணப்ப விபரங்கள், https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ளது. ஜூன் 30 மாலை 5:00 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சின்டெக்ஸ் மேடை
உடைப்பு சரியாகுமா
கரூர்: கரூர் ஜவஹர் பஜார் சாலை, வாசவி மஹால் எதிரே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, போர்வெல் குழாய் அமைத்து, சில ஆண்டுகளுக்கு முன் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன், தொட்டி உள்ள மேடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அது சீரமைக்கப்படவில்லை.
எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள், தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். உடைந்து சின்டெக்ஸ் தொட்டி மேடையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகள் மாயம்;
தந்தை புகார்
கரூர்: வெள்ளியணை அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை சல்லிகாரப்பட்டி பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மகள் பிரியதர்ஷினி, 20; பி.காம்., வரை
படித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 23ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, பிரியதர்ஷினியை காணவில்லை.
இதையடுத்து அவரது தந்தை தண்டபாணி கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.