ADDED : ஜூன் 27, 2024 04:04 AM
ரயில்வே ஸ்டேஷனில்
போதை விழிப்புணர்வு
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜ், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பயணிகளிடம் விளக்கம் அளித்து பேசினார்.
பிறகு, பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ரயில் நிலைய மேலாளர் சேவியர், ரயில்வே போலீசார் வேல்முருகன், பிரேம் குமார், சிவசாமி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மின்கம்பங்களில்முளைத்துள்ள செடிகள்
க.பரமத்தி:
க.பரமத்தி அருகே சின்ன தாதம்பாளையம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதற்கு மின் இணைப்பு கொடுக்க, அப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது.
மேலும், பல மின் கம்பங்களில், செடிகள் அதிகளவில் படர்ந்துள்ளது. அது பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. மழை பெய்ய தொடங்கிய நிலையில், எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ள, கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை, மின்வாரிய ஊழியர்கள் அகற்ற வேண்டும்.
குப்பை தொட்டி தேவைதான்தோன்றிமலை: கரூர் அருகே, காந்திகிராமம் பூங்கா அமைந்துள்ள பகுதியில் குப்பையை சேகரிக்கும் வகையில் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், குப்பையை சாலையில் கொட்டி வருகின்றனர். அந்த பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது. காந்திகிராமம் பூங்கா உள்ள பகுதியில், தேங்கியுள்ள குப்பையை சேகரிக்க தொட்டிகள் வைக்க வேண்டியது அவசியம்