தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் சிலவரி செய்திகள்.....

கரூர் சிலவரி செய்திகள்.....

கரூர் சிலவரி செய்திகள்.....


ADDED : மார் 12, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்னை மரத்தில் இருந்து

தவறி விழுந்தவர் பலி

கரூர்: கரூர் அருகே, தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், சணப்பிரட்டியை சேர்ந்தவர் கணேசன், 51. இவர் கடந்த, 10ல் சணப்பிரட்டி பாரதியார் நகரில் உள்ள செல்லமுத்து என்பவரது வீட்டில், தென்னை மரத்தில் இளநீர் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கணேசன், தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் பலத்த காயம் அடைந்த கணேசன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பள்ளப்பட்டியில் இருந்து

வேலுார் செல்ல பஸ் துவக்கம்

அரவக்குறிச்சி,: பள்ளப்பட்டியில் இருந்து, வேலுார் வரை செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி

தர வேண்டும் என அரவக்குறிச்சி

மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் பள்ளப்பட்டியில் இருந்து சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி, நொய்யல், வேலாயுதம்பாளையம் வழியாக வேலுார் வரை செல்லும் புதிய பஸ் வழித்தடத்தை எம்.எல்.ஏ., இளங்கோ துவக்கி வைத்தார். பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சிபேரவை கூட்டம்

கிருஷ்ணராயபுரம்-

இந்திய கம்யூனிட்ஸ் கட்சியின், ஒன்றிய பேரவை கூட்டம் லட்சுமணம்பட்டி கிராமத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் நாட்டாறயன் தலைமை வகித்தார். இதில் 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புதிதாக ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வளையகாரன்புதுார் நாச்சிமுத்து ஒன்றிய செயலாளராகவும், துணை செயலாளராக செல்வராஜ், பொருளாராக கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.

நெல் நடவு பணிகள்தொழிலாளர்கள் தீவிரம்

கிருஷ்ணராயபுரம்,: வயலுார் கிராமத்தில், விவசாயிகள் விளை நிலங்களில் நெல் பயிர்களை நடவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சரவணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் அதிகளவு நெல் சாகுபடி செய்துள்ளனர். கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் அந்த தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வயல்களில் உழவு பணி செய்யப்பட்டு சமன்படுத்தப்பட்டு, நெற் பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. மேலும் குறைந்த நாட்களில், வரக்கூடிய நெற்பயிர்களை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.

முதல்வர் பிறந்த நாள் விழாநலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்-

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பாலம்மாள்புரம் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் நடந்தது. அதில், கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், பெண்களுக்கு சேலை, சுடிதார் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் கரூர் மாநகராட்சி, 11 வது வார்டு தி.மு.க., செயலர் பழனிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us