ADDED : ஜன 13, 2024 04:00 AM
விவேகானந்தர் பிறந்த நாள்விழா கொண்டாட்டம்அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றிய ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில், விவேகானந்தரின், 161 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில், விவேகானந்தரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பள்ளப்பட்டி அருகே உள்ள அண்ணா நகரில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விவேகானந்தரின் திருவுருவப்படத்திற்கு, ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் வேலம்பாடி கிராம பஞ்சாயத்தில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பராமரிக்கும் பணியை தரு தன்னார்வல அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஊர்க்காவல் படைஅலுவலகம் திறப்புகரூர்: கரூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலக திறப்பு விழா, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்தது.ஊர்க்காவல் படை அலுவலகத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி., பகலவன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, எஸ்.பி., பிரபாகர், ஏ.டி.எஸ்.பி., பிரேமானந்தன், கரூர் டவுன் டி.எஸ்.பி., சரவணன், ஆயுதப்படை டி.எஸ்.பி., நவநீதகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத், ஊர்க்காவல் படை வட்டார தளபதி நீலாவதி உள்பட பலர் உடனிருந்தனர்.சாரண சாரணியர் அடிப்படைபயிற்சி நிறைவு விழாகிருஷ்ணராயபுரம்,: குளித்தலை கல்வி மாவட்டம் பாரத சாரண, சாரணியர் அடிப்படை பயிற்சி நிறைவு விழா கோவக்குளம் தனியர் பள்ளி வளாகத்தில் நடந்தது.கரூர் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். பாரத சாரண, சாரணியர் ஒரு நாள் அடிப்படை பயிற்சியில், 62 சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆணையர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் சந்திரன், மாவட்ட ஆணையர் திரிசாரணியர் விஜி, சட்ட ஆலோசகர் குமார், மாவட்ட பயிற்சி ஆணையர் புருசோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வே.பாளையம் அருகே வேன் திருட்டு: 3 பேர் மீது வழக்குகரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, வேனை திருடி சென்ற, மூன்று பேர் மீது போலீசார் வழ க்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், பி. குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 21; வேன் டிரைவர். இவர் கடந்த மாதம், 26ல் வேலாயுதம்பாளையம் அருகே, மூலிமங்கலம் பிரிவில் வேனை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்தகுமார், 38; ரவி, ராஜா ஆகியோர், வேன் உரிமையாளர் சருகமணி என்பவர், வாங்கிய பணத்தை தரவில்லை என கூறி, டிரைவர் பெரியசாமியை தாக்கி விட்டு, வேனை திருடி சென்றனர். இதுகுறித்து, வேன் டிரைவர் பெரியசாமி கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், ஆனந்தகுமார் உள்ளிட்ட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.நங்கவரம் டவுன் பஞ்.,சாதாரண கூட்டம்குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வடிகால், எரிமேடை மயானம், சாலை வசதி, 50 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்தல், சாலை அமைத்தல் பணிகள் மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பேரூராட்சி அலுவலகத்தில்சமத்துவ பொங்கல் விழாஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி தலைவர் ஜெயந்தி அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். ஏராளமானவர்கள் பங்கேற்று, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.* குளித்தலை தாலுகா அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அலுவலக வளாகத்தின் முன்புறம், இரண்டு மண் பானையில் இனிப்பு, பொங்கல், செங்கரும்பு வைத்து, வாழை இலையில் பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். தாசில்தார் மகுடேஸ்வரன் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கு பொங்கல் வழங்கப்பட்டது.