ADDED : மார் 18, 2026 07:26 AM

அ நிறம் | அளவு
கரூர்:புதிதாக நியமிக்கப்பட்ட கரூர் எஸ்.பி.,ஹரி கிரண் பிரசாத் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
கரூர்
மாவட்ட எஸ்.பி.,யாக கடந்த ஜூலை, 21 முதல் பணி-யாற்றி வந்த ஜோஷ்
தங்கையாவை, நேற்று முன்தினம் மாற்றி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதையடுத்து, புதிய எஸ்.பி.,யாக ஹரி கிரண் பிரசாத் என்பவரை, கரூர்
எஸ்.பி.,யாக நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
நேற்று காலை
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், ஹரி கிரண் பிரசாத் பொறுப்பேற்று
கொண்டார். அவருக்கு ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள்,
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் எஸ்.பி., அலுவலக ஊழியர்கள்
வாழ்த்து தெரிவித்தனர்.
