தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குத்துச்சண்டை போட்டியில் கரூர் மாணவருக்கு வெள்ளி

குத்துச்சண்டை போட்டியில் கரூர் மாணவருக்கு வெள்ளி

குத்துச்சண்டை போட்டியில் கரூர் மாணவருக்கு வெள்ளி


ADDED : செப் 14, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், பசுபதிபாளையம் விவேகானந்தா அரசு உதவி பெறும் பள்ளி மாணவர், வெள்ளி பதக்கம் பெற்றார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள், நாமக்கல் பி.ஜி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில், கரூர் பசுபதிபாளையம் விவேகானந்தா அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் லேகன், வெள்ளி பதக்கம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர் லேகனை, பள்ளி செயலாளர் ஸ்ரீமத் சுவாமி த்ரையம்பகேஷ் வரானந்தா மகராஜ், தலைமையாசிரியர் விஜயகுமார், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us