தேசிய பென்காக் சிலாட் போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி
தேசிய பென்காக் சிலாட் போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி
ADDED : பிப் 07, 2026 09:17 AM

அ நிறம் | அளவு
கரூர்: தேசிய அளவிலான பென்காக் சிலாட் போட்டியில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் தேசிய அளவிலான பென்காக் சிலாட் போட்டி கடந்த ஜன., 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடந்தது. அதில் தமிழக அணியில், 59 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதி சுற்றில் தமிழக அணியை சேர்ந்த மாணவ, மாணவியர், 10 தங்கம், 7 வெள்ளி, 15 வெண்கல பதக்கம் பெற்றனர். அதில், கரூர் கிச்சா மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவியர் நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என, எட்டு பதக்கங்களை பெற்றனர்.
வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவ, மாணவியரை கரூர் மாவட்ட பென்காக் சிலாட் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் மாஸ்டர் வீரமணி மற்றும் பெற்றோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
