/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திசை காட்டும் அறிவிப்பு பலகை சேதத்தால் அவதி
/
திசை காட்டும் அறிவிப்பு பலகை சேதத்தால் அவதி
UPDATED : பிப் 07, 2025 01:29 AM
ADDED : பிப் 07, 2025 01:25 AM
திசை காட்டும் அறிவிப்பு பலகை சேதத்தால் அவதி
கரூர் : வேலாயுதம்பாளையத்தில், திசை காட்டும் அறிவிப்பு பலகை சேதத்தால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் பிரிவு சாலை உள்ளது. இங்கிருந்து நாமக்கல், கொடுமுடி, கரூர், திருச்சி, புகழிமலை கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த சாலையில், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், ரவுண்டானா நடுவில் திசை காட்டும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி பலகை, திசை, கி.மீ., ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வழிகாட்டு பலகை முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதில், எந்த ஊருக்கு என்ற தகவல் சரியாக தெரியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் நின்று கொண்டு, எந்த திசை செல்வது என திணறுகின்றனர். சில நேரங்களில் தவறான பாதையில் வாகன ஓட்டுனர்கள் சென்று விடுகின்றனர். எனவே, திசை காட்டும் அறிவிப்பு பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.