/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கரூர்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கரூர்
ADDED : டிச 06, 2024 07:27 AM
கரூர்: கரூரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூரில், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, பஸ் பாடி, கொசுவலை ஆகிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடவூர், குளித்தலை, தோகைமலை, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி பகுதிகளில் இருந்து தினமும், 1.50 லட்சம் பேர் இங்கு வந்து பணிபுரிந்து விட்டு செல்கின்றனர். ஏராளமான பள்ளி, கல்லுாரிகளும் உள்ளன.
இதனால் காலை, மாலை பீக் அவர்ஸ் நேரங்களில் கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, உழவர்சந்தை, லைட்ஹவுஸ் காானர், திருமாநிலையூர் ரவுண்டானா, சுங்ககேட் போன்ற இடங்களில் வாகனங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்ல, அரை மணி நேரமாகிவிடுகிறது.
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். பீக் அவர்ஸ் நேரங்களில், கட்டாயம் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் நெரிசலை குறைக்க முடியும்.