ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த, 18 முதல் நடந்து வருகிறது.நேற்று கரூர் தாலுகா அலுவலகத்தில், சணப்பிரட்டி, மேலப்பாளையம், உப்பிடமங்கலம் மேல்பாகம், கீழ்பாகம், மணவாடி மற்றும் புலியூர் பகுதிகளுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.அதில், 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவாய் துறை சார்ந்த கோரிக்கை மனுக் களை கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசலிடம் வழங்கினர்.
கரூர் தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட, வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்