கரூர் மேற்கு பகுதி தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
கரூர் மேற்கு பகுதி தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : செப் 14, 2024 07:06 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாநகர மேற்கு பகுதி, தி.மு.க., சார்பில், பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில், தான்தோன்றிமலை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அதில் வரும், 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் பணிகளை தொடங்குவது, திராவிட மாடல் அரசின் சாதனைகளை, பொதுமக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் செய்வது உள்ளிட்ட, பல்வேறு பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கனகராஜ், துணை செயலாளர்கள் வெங்கட்ராமன், மோகன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
