/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மேற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
/
கரூர் மேற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
ADDED : ஜன 04, 2025 01:17 AM
கரூர், ஜன. 4-
கரூர் மேற்கு மின் வாரிய அலுவலகம், இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் இயக்குதலும், காத்தலும் கரூர் மேற்கு அலுவலகம், இளமின் பொறியாளர் அலுவலகம் கடந்த, 2 முதல் கரூர் ராமானுஜம் நகர் தெற்கு, கதவு எண், 244, என்ற வாடகை கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் கோவை சாலை, காந்திபுரம், வையாபுரி நகர், மகாத்மா காந்தி சாலை, கே.வி.பி., நகர், பாரதி நகர், ராமானுஜம் நகர், அண்ணா நகர் முதல் தெரு, எல்.ஜி.பி., நகர், மகாத்மா காந்தி நகர், பாரி நகர், சின்ன ஆண்டாங்கோவில், மதுரை பைபாஸ் கிழக்கு, சேலம் பைபாஸ் கிழக்கு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மின் கட்டணம் செலுத்தலாம். இதர தேவைக்கும் அணுகலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

