/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜோதிமணி வெற்றி பெற்றால் கரூருக்கு வளர்ச்சி இருக்காது: மாஜி அமைச்சர் பேச்சு
/
ஜோதிமணி வெற்றி பெற்றால் கரூருக்கு வளர்ச்சி இருக்காது: மாஜி அமைச்சர் பேச்சு
ஜோதிமணி வெற்றி பெற்றால் கரூருக்கு வளர்ச்சி இருக்காது: மாஜி அமைச்சர் பேச்சு
ஜோதிமணி வெற்றி பெற்றால் கரூருக்கு வளர்ச்சி இருக்காது: மாஜி அமைச்சர் பேச்சு
ADDED : ஏப் 16, 2024 06:57 AM
கரூர் : ''காங்., கட்சி வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றால், கரூர் லோக்சபா தொகுதிக்கு வளர்ச்சியே இருக்காது,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட முத்தாம்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
கடந்த, 2011-2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு புதிய குடிநீர் திட்டங்கள், அரசு கலைக்கல்லுாரி, மாயனுாரில் அம்மா பூங்கா, மாயனுார் கதவணை மேம்பாட்டு பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ், வாய்க்கால்கள், குளங்கள் துார் வாருதல் உள்ளிட்ட, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
கரூர் நகரில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மாநகராட்சி குடிநீர் திட்டங்கள், வெண்ணை மலையில் பூங்கா, திருமண மண்டபம், வாங்கலில் சமுதாய கூடம், காந்தி கிராமத்தில் பூங்கா, அரவக்குறிச்சி தொகுதியில் புகழூர் தாலுகா, காவிரியாற்றில் கதவணை உள்ளிட்ட, பல்வேறு பணிகள் அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், கடந்த மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தார்கள் என, பட்டியல் போட முடியுமா ? கரூர் சட்டசபை தொகுதியில், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்ற, முன்னாள் அமைச்சர் தற்போது, புழல் சிறையில் உள்ளார். அவருடன் வந்து ஓட்டு கேட்ட, ஜோதிமணி கடந்த ஐந்தாண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை.
காங்., வேட்பாளர் ஜோதிமணி டெல்லியிலும், கர்நாடகா மாநிலத்திலும்தான் அரசியல் செய்வார். கரூர் தொகுதி வளர்ச்சியில், ஜோதிமணிக்கு ஒரு துளி கூட அக்கறை இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில், மத்திய அரசிடம் பேசி, ஒரு சிறப்பு திட்டத்தையும் கரூருக்கு கொண்டு வரவில்லை.
காங்., வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற்றால், கரூர் தொகுதிக்கு வளர்ச்சி என்பதே இருக்காது. இந்தியாவிலேயே பின் தங்கிய தொகுதியாக, கரூர் மாறி விடும். இதனால், வரும் லோக்சபா தேர்தலில் ஜோதிமணிக்கு பாடம் புகட்ட, அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி பெற செய்தால், மத்திய அரசின் திட்டங்கள் கரூரை தேடி வரும். வரும், 2026ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, தங்கவேலுவின் வெற்றி அச்சாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்பட, அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

