/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குண்டும், குழியுமான சாலை ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதி
/
கரூரில் குண்டும், குழியுமான சாலை ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதி
கரூரில் குண்டும், குழியுமான சாலை ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதி
கரூரில் குண்டும், குழியுமான சாலை ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 19, 2025 01:42 AM
கரூர் :கரூரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர்-திருச்சி சாலை ஆண்டாங்கோவில் பிரிவு வழியாக, உழவர் சந்தை, அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில், மருத்துவமனைகளுக்கு, பொதுமக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன.
இந்நிலையில், ஆண்டாங்கோவில் பிரிவு சாலையின், பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, சீரமைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.