/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கீரனுார் பஞ்., அலுவலகம் திறப்பு விழா கோலாகலம்
/
கீரனுார் பஞ்., அலுவலகம் திறப்பு விழா கோலாகலம்
ADDED : டிச 07, 2024 06:42 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கீரனுார் பஞ்., நிர்வாகத்திற்கு, புதிய கிராம பஞ்., செயலக கட்டடத்தை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகா-மசுந்தரி திறந்து வைத்தார்.
கீரனுார் பஞ்., தலைவர் மகாலட்சுமி மாணிக்கம் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகத்திற்கு எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி
பரிந்-துரை செய்தார். இதையடுத்து (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) திட்-டத்தின் கீழ், 42 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
புதிய கட்டடம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால், பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சிக்கு கீரனுார் பஞ்., தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கடவூர் வடக்கு ஒன்றிய
செயலர் ராம-லிங்கம், கடவூர் கமிஷனர் முத்துகுமார், மக்கள் பிரதிநிதிகள். அலுவலர்கள் கலந்து கொண்டனர்.