/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விற்பனைக்கு குவிந்த கேரளா பலாப்பழங்கள்
/
விற்பனைக்கு குவிந்த கேரளா பலாப்பழங்கள்
ADDED : மே 04, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கேரளா மாநிலத்தில் இருந்து வரத்தான பலாப்பழங்கள், கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளன.
தமிழகத்தில், பண்ருட்டி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் மலை பிரதேசங்களில் பலாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்ததால், பலாப்பழம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால், கேரளா மாநிலம் மற்றும் புதுக்கோட்டையில் இருந்து பலாப்பழங்கள், தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. கரூர் - வாங்கல் சாலை பழைய அரசு மருத்துவமனை எதிரே, நேற்று காலை பலாப்பழங்கள் விற்பனை ஜோராக நடந்தது. பெரிய அளவிலான ஒரு பழம், 100 முதல், 150 ரூபாய் வரையிலும், சிறிய பழம், 60 முதல், 80 ரூபாய் வரை விற்பனையானது.