/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அகில இந்திய கூடைப்பந்து கேரள போலீஸ் அணி வெற்றி
/
அகில இந்திய கூடைப்பந்து கேரள போலீஸ் அணி வெற்றி
ADDED : மே 24, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில் நடந்து வரும், அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், கேரள போலீஸ் பெண்கள் அணி வெற்றி பெற்றது.
கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும், 27 வரை போட்டி நடக்கிறது.
நேற்று மாலை, கேரள போலீஸ் பெண்கள் அணியும், சவுத் சென்ட்ரல் ரயில்வே பெண்கள் அணியும் மோதின. அதில், கேரள போலீஸ் பெண்கள் அணி, 61-57 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.