/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த, ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் பஞ்சமாதேவி அரசு காலனி பகுதியை சேர்ந்த அசோகன் மகன் நிவாஷ் குமார், 30; இவர் கடந்த மார்ச், 25 ல், 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் நிவாஷ் குமார், இவரது தாய் சரஸ்வதி, உறவினர் நித்யா, நண்பர்கள் மதன், கார்த்திக், மற்றொரு மதன் ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.