/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கிட்ஸ், பேமிலி ஷாப்பிங் கண்காட்சி
/
கரூரில் கிட்ஸ், பேமிலி ஷாப்பிங் கண்காட்சி
ADDED : ஜன 28, 2024 10:53 AM
கரூர்: கரூர் பிரேம்மகாலில் கிட்ஸ்அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி தொடக்க விழா நேற்று முன்தினம் தொடங்கியது. பியூபா குரூப்புஷ்பராஜ், ஜே.சி.ஐ., டைமண்ட் தலைவர் சூரியகுமார்
ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராண்ட்சிட்டி டெவலப்பர்ஸ் பால்ராஜ், எல்.ஐ.சி., நடராஜன், ஆடிட்டர் செல்வகுமார், ஆஸ்கார்கேபிடல் செந்தில்குமார் உள்பட பலர் குத்து
விளக்கு ஏற்றினர்.
இது குறித்து டிரைமேக்ஈவண்ட் இம்ரான் கூறியதாவது: இந்த கண்காட்சியில் வீட்டு உபயோகப்பொருட்கள், கார் நிறுவனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ்நிறுவனங்கள், ஹவுசிங்பைனான்ஸ், ரியல்எஸ்டேட் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. டோர்டெலிவரியும்செய்கின்றனர்.
குழந்தைகளின் பொழுது போக்கிற்கு ராட்சத பலுான்கள், 10க்கும்மேற்பட்ட ஜங்கிபுக்மோக்ளி நண்பர்கள், ஒட்டக சவாரி, படகு சவாரி, 3டி ஷோ, உணவகங்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 1௦:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, இன்னும் இரண்டு நாட்கள் நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.