கொங்கு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 10ம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி
கொங்கு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 10ம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி
ADDED : மே 25, 2026 02:37 AM

கரூர்:கரூர்,
வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2 தேர்வில்
பள்ளி மாணவன் அஹமது பர்கான், 600க்கு, 594 மதிப்பெண் பெற்று முதலிடம்,
மாணவி நிகிதா, 569 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம், மாணவி தர்ஷினி, 566
மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு
தேர்வில், பள்ளி மாணவி வாசிகா, 500க்கு, 484 மதிப்பெண்ணும், மாணவி சுகிதா,
மாணவர் லோகித் ஆகியோர், தலா, 479 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம்,
மேகநாத், தர்ஷன் தலா, 477 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
பள்ளியில்,
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை அட்மிஷன் நடைபெறுகிறது. பத்தாம்
வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்பில் சேர
கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,
மாணவியர்களை கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து,
தாளாளர் பாலகுருசாமி, பொருளாளர் பிரேம் டெக்ஸ் வீரப்பன், இணை
செயலாளர் சேதுபதி, பள்ளி முதல்வர் சுரேஷ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி
பாராட்டினர்.
மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களின்
பெற்றோர்களுக்கும், பள்ளியில் சால்வை அணிவித்து பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.
