ADDED : ஆக 15, 2025 03:18 AM
கரூர், கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (16ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
வீடு மற்றும் அலுவலகங்களில், பல வண்ணங்களில் கிருஷ்ணர் பொம்மை, படங்களை அலங்கரித்து அவர் விரும்பி உண்ணும் வெண்ணெய் படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கோவை ரோடு, ஜவகர் பஜார், வெங்கமேடு, பசுபதிபாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள் மற்றும் தரை கடைகளில் கிருஷ்ணர் பொம்மை விற்பனை மும்முரமாக நடந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து கரூர் வியாபாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு கிருஷ்ணரின் பொம்மைகளை, பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். 70 முதல் 450 ரூபாய் வரை பொம்மை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரம் நன்றாக உள்ளது,' என்றார்.