/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கண்ணபிரான் பஜனை மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
/
கண்ணபிரான் பஜனை மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED : ஆக 16, 2024 05:29 AM
கரூர் :க.பரமத்தி யூனியன், தென்னிலை மேற்கு பஞ்., கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடம் சார்பில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஆண்டுதோறும் உறியடி திருவிழாவில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு வரும், 26ல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. கிருஷ்ணரை அலங்கரித்து பல்லக்கில் வைத்து, முக்கிய வீதிகள் வழியாக புறப்பாடு நடக்கும். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறும் போட்டி நடக்கிறது.ஆண் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிவித்து பங்கேற்கலாம். பகல், 1:00 மணிக்கு கண்ணபிரானுக்கு ஊஞ்சல் பாட்டு, தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மாலையில் மறு அபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடம் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.