/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., பாக பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., பாக பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., பாக பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., பாக பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 10, 2025 02:06 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், பாக கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், திருக்காம்புலியூர் தனியார் மண்டபத்தில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் பாரி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடக்கிறது. அந்தந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் உடன் சென்று படிவம் வழங்கும்போது, வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இறந்த வாக்காளர்களை நீக்க உதவி செய்ய வேண்டும். விடுபட்ட வாக்காளர்களின் பெயர்-களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பணி-களில் கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. மாவட்ட எம்.ஜிஆர்., அணி செயலாளர் தானேஷ் முத்துகுமார், கிருஷ்ணரா-யபுரம் கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., கட்சி செயலாளர் இளங்கு-மரன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய பாக கிளை பொறுப்பா-ளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

