/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் கிழக்கு பா.ஜ., மண்டல ஆலோசனை கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் கிழக்கு பா.ஜ., மண்டல ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் கிழக்கு பா.ஜ., மண்டல ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் கிழக்கு பா.ஜ., மண்டல ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 01:30 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., மண்டல ஆலோசனை கூட்டம் லாலாப்பேட்டையில் நடந்தது.கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில பா.ஜ., மனதின் குரல் பொறுப்பாளர் மீனா, மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பாளர்களாக பங்கேற்றனர்.
பா.ஜ.,வை வலுப்படுத்துவது, வரும் தேர்தலின் போது, பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள், மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்ட பணிகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.