தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாராக மாறிய சுற்றுச்சுவர் இல்லாத கிருஷ்ணராயபுரம் உயர்நிலைப்பள்ளி

பாராக மாறிய சுற்றுச்சுவர் இல்லாத கிருஷ்ணராயபுரம் உயர்நிலைப்பள்ளி

பாராக மாறிய சுற்றுச்சுவர் இல்லாத கிருஷ்ணராயபுரம் உயர்நிலைப்பள்ளி


ADDED : செப் 08, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், மாலை நேரங்களில் மது பாராக சிலர் பயன்ப-டுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்-பட்ட கட்டாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்-ளியில், 192 மாணவ, மாணவியர் படித்து வரு-கின்றனர். பள்ளியில் கழிப்பறை, குடிநீர், சுகா-தாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், மாண-வர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவில் மது அருந்தும் பாராக மாறி விடுகிறது. குடிகமகன்கள் சிலர் மதுபாட்டி-லுடன் மாலை, 6:00 மணிக்கு மேல் பள்ளி வளா-கத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு, காலி பாட்-டில்களையும், உணவு பொட்டலங்களையும், காலி வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கப், சிகரெட் பாக்கெட், போதை தரும் பொருட்களின் காலி பாக்கெட்டுகள் வீசி விட்டு செல்கின்றனர். பள்ளி மைதானத்தில், மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்-றன.

மறுநாள் காலை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இதை பார்த்து, செய்வதறியாமலும், யாரிடம் சொல்லி இதை தடுப்பது என தெரியா-மலும் தவிக்கின்றனர். மேலும், மாணவர்கள் விளையாடும் போது, உடைந்த மதுபாட்டில்-களின் கண்ணாடி துண்டுகள் கால்களில் குத்தி காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு கழிவு-களை சாப்பிட தெரு நாய்களும், பள்ளிக்குள் படையெடுகின்றன. இது மட்டுமின்றி விஷ ஜந்-துக்களும் படையெடுக்கின்றன.

எனவே, உடனடியாக அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us