/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் 12 மி.மீ., மழை பதிவு
/
கிருஷ்ணராயபுரத்தில் 12 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 12, 2024 12:11 PM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியினில் இரவில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட மாயனுார், மணவாசி, பஞ்சப்பட்டி, திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை, வயலுார் ஆகிய கிராம பகுதியில், நேற்று முன்தினம் இரவு, நேரங்களில் மழை பெய்தது. இந்த மழையால், குளிர்ச்சி நிலவியது. மேலும், மழை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள சிவப்பு சோளம், வாழை, வெற்றிலை ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது.
இதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வர வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு பசுதீவனம் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர். தற்போது, மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி, பஞ்சப்பட்டி பகுதியில், 11 மி.மீ., மழை, கிருஷ்ணராயபுரம், 12 மி.மீ., மாயனுார், 3 மி.மீ., ஆகிய அளவுகளில் மழைப்பொழிவு இருந்தது.