/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 07, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மழை பொழிவு காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், சேங்கல், மணவாசி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் கடுமையான வெப்பம் குறைந்தது. மேலும் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு மணி நேரம் மழை பெய்துள்ளது. சேங்கல், முனையனுார், திருக்காம்புலியூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தால், பயிர்களுக்கு பயன் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.