கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., குடிநீர் திட்டப்பணி துவக்கம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., குடிநீர் திட்டப்பணி துவக்கம்
ADDED : பிப் 06, 2026 04:41 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம்
டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், கொண்டு வரப்பட்ட அம்ருத் குடிநீர் திட்ட
மேம்பாட்டு பணிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கிருஷ்ணராயபுரம்
டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு காவிரி
குடிநீர் வினியோகம் செய்யப்படுகி-றது. இந்நிலையில், அம்ருத் திட்டம் மூலம்
டவுன் பஞ்சாயத்தில் தரைதள நீர்தேக்க தொட்டி மற்றும் மேல்நிலை நீர்தேக்க
தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டிகள் மூலம், நீர் நிரப்பி மக்களுக்கு
வினியோகம் செய்வதற்காக குடிநீர் திட்ட மேம்-பாட்டு பணிகளை, முதல்வர்
ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில்
கிருஷ்ணராயபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகா-மசுந்தரி, கிருஷ்ணராயபுரம்
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேது-மணி, துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர்
வெங்க-டேசன், கிருஷ்ணராயபுரம் நகர தி.மு.க., செயலாளர் சசிக்குமார்,
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா மற்றும் கவுன்சிலர்கள்,
டவுன் பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.
