/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரணக்கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரணக்கூட்டம்
ADDED : மே 01, 2025 01:29 AM
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம், டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில்
நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், தொடர்ந்து வரி வசூல் முழுமையாக செய்ததால், டவுன் பஞ்சாயத்து வரி தண்டலர் சவரிமுத்துவிற்கு, ஒரு மாதம் ஊக்க தொகை வழங்குதல், ஆண்டு தணிக்கை அறிக்கை முடிவு குறித்து தெரிவித்தல், டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் உள்ள அரசவள்ளிதெரு கிழக்கில் இருந்து, மேற்கு வரை புதிய சாலை அமைத்தல், பிச்சம்பட்டி குடி தெருவில் இருந்து பாம்பலம்மன் கோவில் வரை சாலை அமைத்தல், வேடர் தெரு வாய்க்கால் முதல் மெயின்ரோடு வரை சாலை அமைத்தல், கோவக்குளம் குடித்தெரு மயான சாலை வரை புதிய சாலை அமைத்தல், உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் ருக்மணி, வார்டு கவுன்சிலர்கள்கலந்து கொண்டனர்.

