/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : ஜூன் 01, 2025 01:29 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம், பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கூடுதல் பள்ளி கட்டடம் கட்டுதல், குடிநீர் வசதி, கழிவறை கட்டுவதற்காக, 36 லட்சம் ரூபாய், ரூ.10 லட்சம் மதிப்பில் மஞ்சமேடு தெற்கு பகுதி சாக்கடை வடிகால் அமைத்தல், ரூ. மூன்று லட்சம் மதிப்பில், பிச்சம்பட்டி குடித்தெருவில் புதிய ஆழ்குழாய் மின்மோட்டாருடன் அமைத்தல், கோவக்குளம் அரிஜன காலனியில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல் எனபன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத்தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் ருக்குமணி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.