/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம்
ADDED : அக் 31, 2025 12:33 AM
கிருஷ்ணராயபுரம்,  கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார்.
டவுன் பஞ்சாயத்து வார்டு  எண்-4ல் மேல அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில்  மற்றும் வார்டு எண்.11ல் வேடர் தெருவில்  சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல்,  வார்டு எண்:2ல் அரசவள்ளி  தெருவில் வடிகால்களுக்கு மூடி அமைத்தல்,  அரசவள்ளி தெருவில் பொது கழிப்பிடம், தேசிய நெடுஞ்சாலை வரை சிமென்ட் சாலை அமைத்தல்,  கோவக்குளம் மினி அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன. டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

