/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நகராட்சி கூட்டம்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
குளித்தலை நகராட்சி கூட்டம்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி கூட்டம்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி கூட்டம்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : டிச 03, 2025 07:40 AM

குளித்தலை, குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.
நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி செல்வத்தை, கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தனர். அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்த் தீர்மானங்களை வாசித்தார். பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
தி.மு.க., கவுன்சிலர் சந்துரு: வளர்ச்சி பணிகள் செய்வதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் பணி துவங்காமல் உள்ளது. தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுவதால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன்: கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகளை துவங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் சகுந்தலா: தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட பணிகள், படிப்படியாக துவங்கப்படும்.
தி.மு.க., கவுன்சிலர் பிச்சை: இன்னும் ஒன்றரை ஆண்டுகளே காலம் உள்ளது. நிறைவேற்றப்பட்ட பணிகள் நடைபெற்றால்தான், வரும் சட்ட சபை தேர்தலுக்கு பொதுமக்களை நாடி செல்ல முடியும். உடனே பணிகளை துவங்குவது நல்லது.
தலைவர் சகுந்தலா: நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அவசர கூட்டத்தில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

