/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு
/
குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு
ADDED : டிச 28, 2024 02:02 AM
குளித்தலை: குளித்தலையில் நடைபெறவிருந்த, ஜீப் ஏலம் ஒத்திவைக்கப்பட்-டது.
குளித்தலை யூனியனுக்கு சொந்தமான, இரண்டு ஜீப் ஏலம் விடு-வதாக முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று  காலை, 11:30 மணியளவில் நடந்த ஏலத்திற்கு திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்ட பகுதியில் இருந்து, 50-க்கும் மேற்-பட்ட ஏலத்தாரர்கள் முன் தொகை செலுத்த வந்திருந்தனர்.
யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், யூனியன் ஏ.பி.டி.ஓ., விஜயகுமார், மேலாளர் திருஞானம் முன்னிலையில் ஏல
தாரர்கள்  முன் தொகையை செலுத்தினர். அப்போது,  திடீ-ரென கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கமிஷனர் ராஜேந்-திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என, தகவல் வந்ததால் ஜீப் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட, மூன்று மாவட்டத்தை சேர்ந்த ஏலதாரர்கள் மத்-தியில் சலசலப்பு ஏற்பட்டு ஏமாற்றத்துடன்  சென்றனர்.

