/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு கல்லுாரி ஆண்டு விழா
/
குளித்தலை அரசு கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மார் 22, 2024 07:03 AM
குளித்தலை : குளித்தலை, அரசு கலைக்கல்லுாரியில் நேற்று ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது.
இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் ராமநாதன் வரவேற்றார். முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, அறிக்கை வாசித்தார். அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் அலெக்சாண்டர் பேசுகையில்,'' மாணவர்கள் இன்றைய கல்வி சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிக்கோள், நேர்மறையான சிந்தனை, மனசாட்சியடன் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இவை மூன்றும் இருந்தால், வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம்,'' என்றார்.
பின்னர், விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டு விழா ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி வாசித்தார். மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு நன்றி கூறினார்.நுண்கலை பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரவணன், இளைஞர் நல மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பத்மப்பிரியா மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.பேராசிரியர்கள் ஹில்டா தேன்மொழி, சுபத்ரா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

