ADDED : ஜன 27, 2024 04:30 AM
கோலாகலம்
குளித்தலை: குளித்தலை அடுத்த கழுகூர் பெரியஏரி தெற்கு கரை பகுதியில், நாகனுார் மற்றும் கழுகூரில் வசிக்கும் குடிப்பாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட, தீயில் மாண்ட குட்டையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த, ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர்.
அதை தொடர்ந்து, குளித்தலை காவிரியாற்றில் இருந்து நெய், புனிதநீரை தாரை, தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் அழைத்து வரப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின், முதல் நாள் மற்றும் 2வது நாள் யாக சாலை பூஜை முடிந்து, நாடிசந்தானம், உயிரூட்டல், பிம்பசுத்தி, யாத்ராதானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, தீயில் மாண்ட குட்டையம்மன் கோவிலுக்கு, புன்னிய தீர்த்தங்களை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் செய்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

