/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குன்னாங்கவுண்டம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
குன்னாங்கவுண்டம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குன்னாங்கவுண்டம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
குன்னாங்கவுண்டம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 30, 2025 01:20 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., குன்னாங்கவுண்டம்பட்டியில், மகா மாரியம்மன், மகா காளியம்மன், விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, கிராம மக்கள் முடிவு செய்தனர்.
விழாவை முன்னிட்டு கடந்த, 21 காலை முகூர்த்தக்கால் நடப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. 27ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
நேற்று காலை கோமாதா பூஜையுடன் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது, அதை தொடர்ந்து கடம் புறப்பாடு, கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் அடங்கிய கும்பத்தை கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவர் மகா மாரியம்மன், காளியம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
மருத்துவர் மணப்பாறை கலையரசன், தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க தலைவர் நாகராஜன், குளித்தலை பாலசுப்பிரமணியன், வடமலை, கோபால் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.