/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பாச்சிப்பட்டி - வேப்பங்குடி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி மந்தம்

ADDED : பிப் 16, 2025 03:43 AM
கிருஷ்ணராயபுரம்: குப்பாச்சிப்பட்டி - வேப்பங்குடி வரை செல்லும் தார்ச்சாலை பணிகள் மந்த நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., குப்பாச்சிப்பட்டி - வேப்பங்குடி வரை தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை பிரதா-னமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த சாலை பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியு-மான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி மக்கள் மனு அளித்தனர். அதன்படி, புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.சாலை நடுவே தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், புதிய தார்ச்சாலை அமைப்பதற்காக பழைய சாலையை, பொக்லைன் இயந்திரம் கொண்டு பறிக்கப்பட்டு பணிகள் மந்த நிலையில் நடந்து வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, பஞ்., நிர்-வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.