/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரவள்ளிக்கிழங்கு களை எடுக்கும் பணி தீவிரம்
/
மரவள்ளிக்கிழங்கு களை எடுக்கும் பணி தீவிரம்
ADDED : பிப் 17, 2024 01:46 PM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி களை எடுக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, கோடங்கிப்பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, வேப்பங்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது நடவு செய்யப்பட்ட குச்சிகள் முளைத்து வருகிறது.
குச்சி நடுவில் அதிகமான களைகள் வளர்ந்து வருவதால், செடிகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் மூலம் களைகள் அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் எம்.பி., ஜோதிமணி ஆய்வு
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு பணிகளை, எம்.பி., ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார்.
கடந்தாண்டு ஆக., 6ல், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மறுசீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி, வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். தற்போது, பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், மறு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சேலம் ரயில்வே கோட்ட வணிக மேலாளர் செல்வராஜ் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.