ADDED : செப் 23, 2026 07:55 AM
அ நிறம் | அளவு
கரூர்;கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், செயலாளர் அப்பாசாமி
தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 2.0 என்ற
பெயரில் பொது சொத்துக்களை குத்தகைக்கு விடக் கூடாது. மின்சார சட்ட
திருத்தத்தை கைவிட வேண்டும். விதை சட்ட திருத்தத்தை திரும்ப பெற
வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது வினியோக
சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில செயலாளர் எத்திராஜ், மாவட்ட தலைவர் அண்ணா
வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
