ADDED : ஆக 27, 2026 02:56 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த வீரக்குமாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 47. இவர் கடந்த, 14ல் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 3:00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த கணேசன், சுரேஷ் ஆகியோர் கதிர்வேல் வீட்டிற்கு வந்-தனர். பின்னர் கதிர்வேலை எழுப்பிய போது வலது காலில் வீக்-கமும், குதிங்காலில் ரத்தமும் வந்து கொண்டிருந்தது. இந்நி-லையில் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவர், பாம்பு கடித்து விட்டதாக கூறியதால், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி தமிழரசி கொடுத்த புகாரின்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
