ADDED : அக் 06, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் அருகே, நெஞ்சில் தறி மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி சாமி, 55, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், கரூர் அருகே ஆண்டாங்கோவில் உழைப்பாளி நகரில், கருப்பையா என்பவருக்கு சொந்தமான பட்ட-றையில், தறியில் லுங்கி, வேட்டியை நெசவு செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத-விதமாக தறி, பழனிசாமியின் நெஞ்சில் மோதி-யது.
அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைய-டுத்து, அருகில் இருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து-வமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், பழ-னிசாமி உயிரிழந்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
