/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான இடம் வரும் 22ல் ஏலம்
/
ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான இடம் வரும் 22ல் ஏலம்
ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான இடம் வரும் 22ல் ஏலம்
ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான இடம் வரும் 22ல் ஏலம்
ADDED : ஏப் 07, 2025 02:18 AM
கரூர்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு சொந்த-மான இடம் வரும், 22ல் ஏலம் விடப்படும் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வடக்கு கிராமத்தில், தமிழ்-நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான அசையா சொத்தான, மாஸ்டர் திருமண மண்டபமானது (பரப்ப-ளவு 674 சதுர மீட்டர்) வரும், 22 பிற்பகல் 3:00 மணியளவில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, டி.ஆர்.ஓ., கரூர் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்-கியில் பெறப்பட்ட, 25,000 ரூபாய் வங்கி வரைவோலையினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அசையா சொத்து மற்றும் ஏல நிபந்தனைகள் விபரங்களை www.karur.nic.in இணையத்தளத்தில் காணலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

