/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 02:46 AM
கரூர், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்,
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் மோகன்ராஜ், செயலாளர் தங்கவேல், இணை செயலாளர் குணசுந்தரி, பொருளாளர் தமிழரசன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

