/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை செப்.,30ம் தேதி கடைசி நாள்
/
ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை செப்.,30ம் தேதி கடைசி நாள்
ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை செப்.,30ம் தேதி கடைசி நாள்
ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை செப்.,30ம் தேதி கடைசி நாள்
ADDED : செப் 18, 2025 01:27 AM
கரூர் :கரூர் ஐ.டி.ஐ.,யில் வரும், 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மகளிருக்கு மட்டும் தையல் தொழில்நுட்ப பயிற்சி, கணினி தொழில்நுட்ப பயிற்சி ஓராண்டும், மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஓராண்டு படிப்புக்கு வரும், 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது.
மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக்கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படும். கூடுதல் விபரங்களை, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களில், 04324 -222111, 94990 55711, 94990 55712 அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.