/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 13, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் வெங்கமேட்டில், மாவட்ட சலவை தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ்ச்-செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலைஞர் கைவினைத் திட்டம் மூலமாக, சலவை தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளும் திட்டத்தை செயல்படுத்திய, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.
இந்-தாண்டுக்கான துணி தேய்ப்பதற்கான கூலியை உயர்த்துவது, அடுத்தமாதம் மார்ச்சில் நடைபெற இருக்கும் மாநில நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட தலைவர் கருணாநிதி, மாவட்ட பொரு-ளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.