/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நீதிமன்றம் முன் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கரூர் நீதிமன்றம் முன் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக, மாவட்ட வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார். இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் அமல்படுத்துவதை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பை மேற்கொள்வதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.