/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கற்றல் மேலாண்மை சேவை பாரதிதாசன் பல்கலை அழைப்பு
/
கற்றல் மேலாண்மை சேவை பாரதிதாசன் பல்கலை அழைப்பு
ADDED : ஜன 06, 2025 01:47 AM
கரூர்: 'கற்றல் மேலாண்மை சேவை வழங்க விண்ணப்பிக்கலாம்' என, திருச்சி பாரதிதாசன் பல்கலை பதிவாளர்(பொ) காளிதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கல்லுாரிக்கு சென்று படிக்க இயலாத மாணவர் களுக்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலையின், தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மையம், உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
ஆன்லைன் கல்வியின் விரைவான வளர்ச்சி, ஆர்வமுள்ள மாண-வர்களை, போட்டி முனைப்புடன் உருவாக்கும், சந்தை தொடர்-பான படிப்புகளை வழங்க, கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தடையற்ற மற்றும் உலகத்தரம் வாய்ந்த, கற்கும் அனுபவத்தை எளிதாக்கும், கற்றல் மேலாண்மை அமைப்பை ஏற்பது அவசியமாகிறது.
இதுதொடர்பாக, பாரதிதாசன் பல்கலை தொலைதுாரக்கல்வி மற்றும் இணையவழிக்கல்வி மையத்தின் ஆன்லைன் பாடத்திட்-டங்
களுக்கு, கற்றல் மேலாண்மை அமைப்பு
ஆதரவு சேவை வழங்க,
தகுதியான அனுபவம் வாய்ந்த, கல்வி தொழில்நுட்ப சேவை அளிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, பல்கலை இணையதளமான www.bdu.ac.in/cde--ல் அறிந்து கொள்ளலாம். இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் அதற்கான முன் மொழிவை வரும், 13 மாலை, 5:00 மணிக்குள், பல்கலையில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

