/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்: ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள்
/
சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்: ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள்
சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்: ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள்
சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்: ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள்
ADDED : மார் 28, 2024 07:04 AM
கரூர் : லோக்சபா தேர்தலையொட்டி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்., 19ல் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில், வேலையை காரணம் காட்டி, ஓட்டு போடாமல் இருப்பதை தவிர்க்க, பொதுத்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களிலும், சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டாலும், அன்றைய நாளில் சம்பளம் வழங்கப்படுவது இல்லை.
இதுகுறித்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் கூறியதாவது: கடந்த தேர்தல்களில், விடுமுறை மட்டும் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பளம் வழங்கவில்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள, 156 கிராம பஞ்சாயத்துகளில், பெரும்பாலான பஞ்சாயத்துகளில், மானாவாரி நிலங்கள் உள்ள பகுதிகளில் விவசாய பணிகள் இல்லை. வேலை உறுதி திட்டத்தில் கிடைக்கும், சம்பளம்தான் உதவியாக உள்ளது. இதனால் ஏப்., 19 ல் லோக்சபா தேர்தல் நாளில், சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.